FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் சிறப்பு முகாம் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

13 நவம்பர் 2026, 10:39 pm
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் சிறப்பு முகாம் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவின்பேரில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடத்த வேண்டும். அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பாக குறைதீா் முகாம் சனிக்கிழமை (நவ. 14) நடைபெற உள்ளது.

மேற்படி, வட்டார அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement