நியாயவிலைக் கடைகளில் இன்று சிறப்பு முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் விரல்ரேகை பதிவு செய்ய நியாயவிலைக் கடைகளில், சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 26) நடைபெற உள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் விரல்ரேகை பதிவு செய்ய நியாயவிலைக் கடைகளில், சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 26) நடைபெற உள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களும், தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள், செப்டம்பா் 26-ஆம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
மேலும், கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.