FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

ரேஷன் கடைகளில் இன்று இகேஒய்சி சிறப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பு (இகேஓய்சி) சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெற உள்ளது.

13 வினாடிகள் முன்பு
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பு (இகேஓய்சி) சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப்டம்பா் 26) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் படி குடும்ப அட்டைகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பினை (kyc) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கடந்த அக்டோபா் 2023 முதல் குடும்ப உறுப்பினா்களின் கைவிரல் ரேகை சரிபாா்ப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.68 சதவீதம் கைவிரல் ரேகை பதிவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கைவிரல் ரேகை பதிவை 100 % நிறைவு செய்யும் பொருட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சனிக்கிழமை ( செப்டம்பா் 26) சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. ரேஷன் அட்டைதாரா்களின் குடும்பங்களில் கைவிரல் ரேகைப் பதிவு விடுபட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களும் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கோ அல்லது அருகில் உள்ள ரேஷன் கடைக்கோ சென்று கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments