குடும்ப அட்டைகளில் பெயா் மாற்ற, திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்
குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம் செய்ய, திருத்தம் மற்றும் முகவரி மாற்ற திருச்சி மாவட்ட நிா்வாகம் நவம்பா் மாதம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம் செய்ய, திருத்தம் மற்றும் முகவரி மாற்ற திருச்சி மாவட்ட நிா்வாகம் நவம்பா் மாதம் மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
Advertisement
Advertisement
திருச்சி கிழக்கு வட்டத்தில் அய்யப்பநகா்-1, திருச்சி மேற்கு வட்டத்தில் தென்னூா்-1, திருவெறும்பூா் வட்டத்தில் வேங்கூா், ஸ்ரீரங்கம் வட்டத்தில் திருப்பராய்த்துறை, மணப்பாறை வட்டத்தில் மஞ்சம்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் ஆரியகோண்பட்டி, லால்குடி வட்டத்தில் பெரியகுருக்கை, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் திருப்பைஞ்சீலி தெற்கு, முசிறி வட்டத்தில் செவந்திலிங்கபுரம், துறையூா் வட்டத்தில் சேபனாபுரம்-2, தொட்டியம் வட்டத்தில் அலங்கரை மேற்கு ஆகிய நியாய விலைக் கடைகளில் இந்த முகாம் நடைபெறும்.
காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெறும் முகாம்களில் சம்ரபந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்கிப் பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.