FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அருணாச்சலில் திருடப்பட்ட 23 சமையல் எரிவாயு உருளைகள் மீட்பு: நபர் கைது!

அருணாச்சலில் திருடப்பட்ட 23 சமையல் எரிவாயு உருளைகளை போலீஸார் மீட்டது பற்றி....

21 வினாடிகள் முன்பு
கோப்புப்படம்.
பகிர்:

அருணாச்சலில் திருடப்பட்ட 23 சமையல் எரிவாயு உருளைகளை மீட்ட போலீஸார், ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அருணாச்சலபிரதேச மாநிலம், நஹர்லகன் பகுதியில் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு உருளைகள் திருடு வோவதாக போலீஸுக்கு புகார் வந்திருக்கிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

Advertisement

திருட்டு நடந்த விதத்தை ஆய்வு செய்த போலீஸ் குழுவினர், உள்ளூர் ஐஜி பார்க் காலனியைச் சேர்ந்த 30 வயதான அர்ஜுன் ஜுகா குற்றவாளி என்பதைக் கண்டறிந்தனர். இவ்வழக்கில் ஜுகா வியாழக்கிழமை ஜூலி சாலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் கூறினார்.

நஹர்லகன் காவல் ஆய்வாளர் கிருஷ்ணேந்து தேவ் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதுகுறித்து நஹர்லகன் காவல் கண்காணிப்பாளர் நியேலம் நேகா தெரிவித்திருப்பதாவது, கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் மூலம் திருடப்பட்ட 23 சமையல் எரிவாயு உருளைகளும் மீட்கப்பட்டன.

வழக்கமான குற்றவாளிகள் பெரும்பாலும் பூட்டப்பட்ட மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளைக் குறிவைத்தே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் தங்கள் சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

summary

Police in Arunachal Pradesh's Naharlagun have arrested a person and recovered 23 stolen LPG cylinders, officials said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments