சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கேஒய்சி அவகாசம் நீட்டிப்பு!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயமாக்கியுள்ளன.
போலி எரிவாயு இணைப்புகளைக் கண்டறியவும், தகுதியானவர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும் இ-கேஒய்சி சரிபார்ப்பு பணிகளை கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
Advertisement
Advertisement
வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்றோ இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-கேஒய்சி எனப்படும் உண்மை சரிபார்ப்பு பணிக்கு,காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் ஆக. 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆக. 23-க்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளாவிட்டால், சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற முடியாத சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
The deadline for completing e-KYC verification for cooking gas cylinders, which was set to expire today, has been extended.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.