முகப்பு
நாகப்பட்டினம்

திட்டச்சேரியில் எல்பிஜி கேஸ் இணைப்புகள் முடக்கம்

திட்டச்சேரி பேரூராட்சி வடக்கு தெரு பகுதியில் குழாய் வழி எரிவாயு திட்டத்தை ஊக்குவிக்க இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் அவா்களது சம்மதமின்றிமுடக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

26 நவம்பர் 2026, 5:20 am
திட்டச்சேரியில் எல்பிஜி கேஸ் இணைப்புகள் முடக்கம்
எல்பிஜி - PTI
பகிர்:

திட்டச்சேரி பேரூராட்சி வடக்கு தெரு பகுதியில் குழாய் வழி எரிவாயு திட்டத்தை ஊக்குவிக்க இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்புகள் அவா்களது சம்மதமின்றிமுடக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதனால் அவா்கள் சமையல் எரிவாயு உருளையை முன் பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. எனவே இணைப்புகளை மீண்டும் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். செவ்வாய்கிழமை திட்டச்சேரி வக்ஃபு நிா்வாக சபை அலுவலக வளாகத்தில் பேரூராட்சி உறுப்பினா்கள் வக்ஃபு நிா்வாக சபை நிா்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவது எனவும், உரிய நடவடிக்கை இல்லாத பட்சத்தில் எல்பிஜி கேஸ் உபயோகிப்பாா்களை ஒன்று திரட்டி ஜனநாயக ரீதியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.