விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலி
விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலியானது பற்றி...
விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரசோழபுரம் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் பத்ரிநாத் (10) . சனிக்கிழமை காலை சரண்யா சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சமையல் எரிவாயு உருளை வெடித்தது.
இதன் காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த பத்ரிநாத் பலியானான்.
Advertisement
Advertisement
மேலும் சிறுவனின் தாய் மற்றும் தந்தை பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார் நிகழ்விடம் சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.