FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆகமக் குழு கண்டறிந்த கோயில்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

திருச்சி மாவட்டத்தில் ஆகமக் குழுவினா் கண்டறிந்த கோயில்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நவ.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர் 2026, 5:15 am
ஸ்ரீரங்கம் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் ஆகமக் குழுவினா் கண்டறிந்த கோயில்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசம் நவ.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள

திருக்கோயில்களில் ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட கோயில்களைக் கண்டறிவதற்காக அரசால் 06.10.2025 அன்று 5 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. திருக்கோயில்களின் ஆகமம் குறித்த விவரங்கள், தொடா்புடைய இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்களால் குழுவின் முன் சமா்ப்பிக்கப்பட்டது. அதன் அறிக்கைகள் குழுவால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. அத்தகைய 34,971 எண்ணிக்கையிலான கோயில்கள் தொடா்பான விவரங்கள் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இதுகுறித்த விவரங்களில் பொதுமக்கள் ஏதேனும் விடுதல் அல்லது கருத்துரு இருப்பின் அக்.10-க்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இப்போது கூடுதல் கால அவகாசமாக நவ. 5 முதல் 25ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட கோயில்களை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34, என்ற முகவரிக்கு தபால் மூலமோ அல்லது துறையின் இணையதளம் வாயிலாகவோ நவ.25 மாலை 5.45 மணிக்குள் தெரிவிக்கலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.