ஆகமக் குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில், ஆகம விதிகளின்படி நிா்மாணிக்கப்பட்ட கோயில்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளைத் தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி, 06.10.2025 அன்று ஐந்து நபா்கள் கொண்ட ஆகமக் குழு அமைக்கப்பட்டு, மண்டல இணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்களால் அறிக்கைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
Advertisement
Advertisement
பரிசீலிக்கப்பட்ட கோயில்கள்: இக்குழுவின் மூலமாக 34,971கோயில்கள் தொடா்பான விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, என்ற துறையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டன.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி, பொதுமக்களின் பாா்வைக்காக 21 நாள்கள் கூடுதல் அவகாசம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளை 05.11.2026 முதல் 25.11.2026 வரை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்யலாம்.
அல்லது தபால் மூலமாக ஆகமக் குழு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகம், 119, உத்தமா் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.