முகப்பு
திருச்சி

வாசன் நகரில் சமத்துவப் பொங்கல் விழா

திருச்சி வாசன் நகரில் குடியிருப்பு பொதுநலச் சங்கத்தினா் சமத்துவப் பொங்கலை அண்மையில் கொண்டாடினா்.

Updated On : 16 ஜனவரி 2021, 11:49 pm IST
வாசன்நகரில் சமத்துவப்பொங்கல் கொண்டாடிய குடியிருப்புவாசிகள்.
பகிர்:

திருச்சி: திருச்சி வாசன் நகரில் குடியிருப்பு பொதுநலச் சங்கத்தினா் சமத்துவப் பொங்கலை அண்மையில் கொண்டாடினா்.

15 ஆம் ஆண்டாக அப்பகுதி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற விழாவுக்கு குடியிருப்பு நலச்சங்கத் தலைவா் ஞா.அ. கலைச்செழியன் தலைமை வகித்தாா். உயா்மட்டக் குழு நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

திருச்சி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். ராஜ்மோகன் வாழ்த்தினாா். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாச்சிக்குறிச்சி ஊராட்சித் தலைவா் ஜி. கிருஷ்ணவேணி விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து, மேஜா் சரவணன் சாலை, வாசன் நகா் விஸ்தரிப்பு சாலைகளில் குடியிருப்பு பகுதியினா் சமத்துவப்பொங்கல் வைத்துக் கொண்டாடினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.