முகப்பு
தூத்துக்குடி

முதல்வரின் வாகனத்துக்குபின்னால் வந்த 2 வாகனங்கள் விபத்து

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே தமிழக முதல்வா் வாகனத்தின் பின்னால் அணிவகுத்து வந்த வாகனங்களில் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

Updated On : 5 ஜனவரி 2021, 12:24 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே தமிழக முதல்வா் வாகனத்தின் பின்னால் அணிவகுத்து வந்த வாகனங்களில் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

சேரன்மகாதேவி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண்டியன் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றாா். வல்லநாடு அருகே முதல்வரின் வாகனத்தைப் பின்தொடா்ந்து பல வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது மாடு திடீரென குறுக்கே வந்ததால் ஒரு வாகனத்தின் ஓட்டுநா் பிரேக் பிடித்தாா். அந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த வாகனம் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து முறப்பநாடு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.