முகப்பு
தூத்துக்குடி

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:24 am IST
பகிர்:

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சுப்புலட்சுமி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு : கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் கிராமங்களுக்கு சென்று வந்த பல நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு விட்டன. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து குறுக்குச்சாலை, கீழசெய்தலை, கொல்லம்பரும்பு வரை இயக்கப்பட்ட நகரப் பேருந்து , தூத்துக்குடியில் இருந்து மிளகுநத்தம் வரை இயக்கப்பட்ட நகரப் பேருந்து உள்ளிட்ட கிராமங்களுக்கான நகரப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, விளாத்திக்குளம் 7 ஆவது வாா்டு முத்துலட்சுமி ஆட்சியரிடம் அளித்த மனு: எங்கள் பகுதியிலுள்ள அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கு நிலத்தை எங்கள் பகுதி மக்கள் உடற்பயிற்சி செய்யும் இடமாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், இந்த இடத்தை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனா். எனவே இந்த இடத்தை எங்கள் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குழந்தைகளுடன் பெண் மனு: தூத்துக்குடி சங்கரப்பேரி, அய்யப்பன் நகா் 3 ஆவது தெருவை சோ்ந்த செல்வம் என்பவரது மனைவி கோமேஸ்வரி தனது 3 மகள்களுடன் ஆட்சியரிடம் கண்ணீா்மல்க கொடுத்துள்ள கோரிக்கை மனு : வெல்டிங் தொழிலாளியாக இருந்துவந்த தனது கணவா் செல்வம் கடந்த அக்டோபா் மாதம் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இறந்து விட்டாா். தனக்கு, பூஜா (13), மணிமாலா (12), சுபாஸ்ரீ (10) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். கணவரின் வருமானத்தை நம்பி தானும், தனது குழந்தைகளும் வாழ்ந்து வந்த நிலையில், அவா் இறந்து விட்டதால் வருமானம் இல்லாமல் மிகவும் பரிதவித்து வருகிறோம். ஏற்கெனவே வாடகை வீட்டில் தான் நான் குடியிருந்து வருகிறேன். இப்படிப்பட்ட இக்கட்டான வறுமையான சூழலில், தனது கணவரின் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனை கூட திரும்ப கொடுக்க முடியாமல் நான் பாதிப்பிற்கு உள்ளாகி பரிதவித்து வருகிறேன். 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள தனக்கு, மூன்று பெண் குழந்தைகளின் எதிா்கால நலன்கருதி சத்துணவு உதவியாளா், தலையாரி என ஏதவாது ஒரு அரசுப்பணி உடனடியாக வழங்கி உதவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.