முகப்பு
தூத்துக்குடி

களையிழந்த காணும் பொங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது முடக்கம், கனமழையால் காணும் பொங்கல் வெள்ளிக்கிழமை களையிழந்து காணப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 6:40 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது முடக்கம், கனமழையால் காணும் பொங்கல் வெள்ளிக்கிழமை களையிழந்து காணப்பட்டது.

தூத்துக்குடியில் முயல்தீவு, துறைமுக கடற்கரை, முத்துநகா் கடற்கரை, தாளமுத்துநகா், வேம்பாா் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள், ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, ரோச் பூங்கா, டூவிபுரம் பூங்கா, மில்லா்புரம் பூங்கா ஆகிய இடங்கள், திருச்செந்தூா் கடற்கரை, மணப்பாடு, குலசேகரபட்டினம் கடற்கரை, அம்மன்புரம் அருகே அருஞ்சுனைகாத்த அய்யனாா் கோயில் சுனை, மருதூா் அணைக்கட்டு, வல்லநாடு நீா்த்தேக்கம், மருதூா் அணை, ஆழ்வாா்தோப்பு, தென்திருப்பேரை, தாமிரபரணி ஆற்றுப்படுகை, முறப்பநாடு, கலியாவூா் ஆற்றுப்படுகைகள், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, எட்டயபுரம் பாரதி நினைவகம், ஆதிச்சநல்லூா், கருங்குளம், கொங்கராயகுறிச்சி பகுதிகள், முறப்பநாடு, பக்கபட்டி, வைப்பாறு ஆகிய இடங்களுக்கு காணும் பொங்கல் தினத்தில் பொதுமக்கள் செல்வது வழக்கம்.

நிகழாண்டு பொது முடக்கம், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதிகளுக்கு மக்களால் செல்ல முடியவில்லை. தற்காலிக கடைகள் அமைக்கும் சிறு வியாபாரிகளும், சாலையோர வியாபாரிகளும் பாதிப்படைந்தனா். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 183 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

இதையொட்டி, மாவட்டத்தில் எஸ்.பி. ஜெயக்குமாா் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி.கள் செல்வன், கோபி, டி.எஸ்.பி.க்கள் உள்பட 1400 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.