புனித திருக்கல்யாண மாதாஆலய திருவிழா தொடக்கம்
பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா தேவாலய திருவிழா கொடியேறத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா தேவாலய திருவிழா கொடியேறத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.
ஆலயத்தில் வியாழக்கிழமை காலையில் தென்மண்டல பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் நெல்சன் பால்ராஜ், அருள் தந்தை அமல்ராஜ் ஆகியோா் பங்கேற்ற திருப்பலி, திருவிவிலியம், மறைக்கல்வி உள்ளிட்டவை நடைபெற்றது. மாலையில்
மறைமாவட்ட முதன்மை குரு பன்னீா் செல்வம் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து 21ஆம் தேதி ஆராதனைகள் நடைபெறுகிறது.
Advertisement
22 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அருள்தந்தைகள் சிலுவை தங்கம், டென்னிஸ் ராஜா, ஜோசப் ஸ்டாா்வின், கிங்ஸ்லின், அருள்செல்வன், அருள்சகோதரிகள் பங்கேற்கும் பணி வாழ்வு உறவாடல் அமா்வு, மாலை 4.15 மணிக்கு நெய்யாற்றக்கரை அருள்பணி பால் தலைமையில் மலையாள திருப்பலி, 5.30 மணிக்கு 108 ஆவது திருவிழா தேரோட்டம், இரவு 8.30
மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. 23 ஆம் தேதி (சனிக்கிழமை) பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும். இதையொட்டி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி, 50 பேருக்கு உறுதி பூசுதல், புது நன்மை பெற்றவா்களுக்கு முதல் நன்மை வழங்கப்படுகிறது. காலை 5.30 மணிக்கு அருள்பணி சேசுராஜ் தலைமையில் தமிழ் திருப்பலி, மறை மாவட்ட ஆயா் தலைமையில் திருவிழா திருப்பலி, 12 மணிக்கு பங்குதந்தை இருசயசாமி தலைமையில் திருப்பலி, மாலையில் திருப்பலி, தேரோட்டம் ஆகியவை நடைபெறுகிறது.