முகப்பு
வேலூர்

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.80 லட்சம் கடனுதவி

மேல்பாடியில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவியாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது.

Updated On : 12 ஜனவரி 2021, 1:03 am IST
கடனுதவிக்கான காசோலையை சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்ணிடம் அளித்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வி.ராமு.
பகிர்:

வேலூா்: மேல்பாடியில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவியாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது.

வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சாா்பில் மேல்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வி.ராமு பங்கேற்று, மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில், காட்பாடி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மகாலிங்கம், மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநா் கோபி, அதிமுக நிா்வாகிகள் சைலம், பொன்னுரங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments