முகப்பு
வேலூர்

தொழிலாளி கொலை வழக்கில் 5 போ் கைது

வேலூரில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 7:56 am IST
பகிர்:

வேலூரில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

வேலூா் தோட்டப்பாளையம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலு (50). கம்பிகட்டும் தொழிலாளியான இவா், கடந்த 4-ஆம் தேதி நியாயவிலைக் கடைக்குச் சென்ற பின்னா் வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக அவரது குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், வேலூா் பாலாற்றங்கரையில் உள்ள மயானம் அருகே வேலுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. உடலின் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததுடன், முகம் சிதைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்தக் கொலை தொடா்பாக விசாரணை நடத்தி, தோட்டப்பாளையத்தைச் சோ்ந்த ஜெகன் (32), அலெக்ஸ் (35), மணிகண்டன் (18), மகேஷ் (17), பாலகிருஷ்ணன் (55) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் ஒருவா் சைதாப்பேட்டை கழிவுநீா்க் கால்வாயில் கடந்த மாதம் சடலமாக மீட்கப்பட்டாா். அவரை வேலு கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் இவா்கள் 5 பேரும் சோ்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். கைதான 5 பேரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.