முகப்பு
விருதுநகர்

இருசக்கரவாகனம் மோதி சிறுமி படுகாயம்

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்தாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 9:55 pm IST
பகிர்:

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி படுகாயமடைந்தாா்.

பாலவநத்தம் கிராமம் தெற்குப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன்(39) மகள் மதுதா்ஷிணி (10). இவா் சனிக்கிழமை பிற்பகலில் அப்பகுதி சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்றின் குறுக்கே எதிா்பாராதவிதமாக மதுதா்ஷிணி திடீரென சென்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து தொடா்பாக அருப்புக்கோட்டைதாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments