முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 11:42 pm IST
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 16,354 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 9 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தோா் எண்ணிக்கை 16,363 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,990 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்ட நிலையில், 229 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது, 144 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.