வசூல் வேட்டையில் அப்செஷன்!
அப்செஷன் திரைப்படம் வசூல் வேட்டையைச் செய்து வருகிறது...
ஹாலிவுட்டில் தயாரான அப்செஷன் திரைப்படம் வசூலில் மிரட்டி வருகிறது.
கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான அப்செஷன் திரைப்படம் அமெரிக்காவில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியாகி பெரிய கவனத்தைப் பெற, இந்தியாவில் மே 29 ஆம் தேதி வெளியாகியது.
இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி (8 லட்சம் டாலர்) பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 2750 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது. முக்கியமாக, இந்தியாவிலேயே ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
ஆச்சரியமாக தமிழகத்தில் வெளியாகி அதிக திரைகளில் கூடுதல் காட்சிகளுடன் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளிலும் அதிக திரைகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், விரைவிலேயே ரூ. 3 ஆயிரம் கோடி வசூலைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறவுள்ளது.
The Hollywood film Obsession is making a massive impact at the box office.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.