FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஓடிடியில் வெளியானது நானியின் தி பாரடைஸ் திரைப்படம்!

தி பாரடைஸ் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

பாரடைஸ் பட போஸ்டர். - படம்: எக்ஸ்
பகிர்:

நானியின் தி பாரடைஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் திரைப்படம் கடந்த செப்.24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பான் இந்திய அளவில் வெளியான இந்தப் படத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

Advertisement

Advertisement

மேலும் இந்தப் படத்தில் சோனல் குல்கர்னி, ராகவ் ஜுயல், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைப்பில் உருவான பாடல்கள் கவனம் ஈர்த்திருந்தன.

தி பாரடைஸ் திரைப்படம் தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், உலகளவில் ரூ. 180 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதுவே, நடிகர் நானியின் அதிகம் வசூலித்த திரைப்படமாகும்.

இந்த நிலையில், தி பாரடைஸ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

summary

Nani's film The Paradise has been released on the OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments