ஓடிடியில் வெளியானது மண்டாடி!
மண்டாடி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது குறித்து...
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மண்டாடி படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால், இந்தத் திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கப்பட்டன.
இந்தத் திரைப்படம் உலக அளவில் ரூ. 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியையும் வசூலை ஈட்டியுள்ளது.
Advertisement
Advertisement
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இந்தப் படம், ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்ற படகுப்போட்டி காட்சிகள் ஆச்சரியப்படும்படி எடுக்கப்பட்டதால் ரசிகர்களின் விருப்பமான படமாக மாண்டாடி மாறியது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் இன்று(அக். 8) நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
Actor Soori's film Mandadi has been released on an OTT platform and is attracting the attention of fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.