FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சூரியின் மண்டாடி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூரியின் மண்டாடி ஓடிடி வெளியீடு குறித்து...

மண்டாடி பட போஸ்டர்... - படம்: எக்ஸ்
பகிர்:

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் கடந்த செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மண்டாடி படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால், இந்தத் திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரிக்கப்பட்டன.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இந்தப் படம், ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில் இடம்பெற்ற படகுப்போட்டி காட்சிகள் ஆச்சரியப்படும்படி எடுக்கப்பட்டதால் ரசிகர்களின் விருப்பமான படமாக மாண்டாடி மாறியது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தற்போது, மண்டாடி திரைப்படம் திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததுடன் 4-வது வாரத்திலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது. உலக அளவில் ரூ. 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் வரும் அக். 8 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

The OTT release date for actor Soori's film *Mandadi* has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments