அப்செஷன் அன்-கட் வடிவத்தின் ஓடிடி தேதி!
அப்செஷன் அன்-கட் வடிவத்தின் வெளியீடு குறித்து...
அப்செஷன் திரைப்படத்தின் நீக்கப்படாத காட்சிகள் கொண்ட வடிவத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்ஸ்டோன் பிக்சர்ஸ் மற்றும் டீ ஷாப் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான அப்செஷன் திரைப்படம் அமெரிக்காவில் கடந்த மே 15 ஆம் தேதி வெளியாகி பெரிய கவனத்தைப் பெற, இந்தியாவில் மே 29 ஆம் தேதி வெளியாகியது.
தான் விரும்பும் பெண் தன்னை மிகத் தீவிரமாகக் காதலிக்க வேண்டும் என ஏங்கும் நாயகனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைகிறது. ஆனால், தீவிரமான விஷயங்களுக்கே உண்டான அபாயங்கள் என்ன என்பதை மையமாக வைத்து ஹாரர் - திரில்லர் வகையில் இதனை உருவாக்கியிருந்தனர்.
Advertisement
Advertisement
இந்திய மதிப்பில் ரூ. 8 கோடி (8 லட்சம் டாலர்) பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 4000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. மிகப்பெரிய லாபத்தைக் கொண்ட படமென்பதால் இதன் இரண்டாம் பாகத்தின் பணிகளும் துவங்கியுள்ளன.
இந்த நிலையில், இப்படத்தின் நீக்கப்படாத காட்சிகள் (அன்கட் - uncut) கொண்ட வடிவம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற அக். 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the version of the film 'Obsession' that includes deleted scenes has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.