96 மறுவெளியீட்டுத் தேதி!
96 மறுவெளியீடு குறித்து...
96 திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’. இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய கவனம் பெற்றது. பள்ளிகால காதலை நினைத்து பேரிளம் பருவத்தில் ஏங்கும் நாயகன் - நாயகியின் உணர்வுப்பூர்வமான தடுமாற்றங்களைச் சிறப்பான கதை மூலம் இயக்குநர் கூறியிருந்தார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்தன. இப்படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி வரவேற்பைப் பெற்றார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 96 திரைப்படத்தை வருகிற அக். 9 ஆம் தேதி மறுவெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கான வெளியீடாக இது அமைகிறது.
The re-release date of the movie 96 has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.