மோகன்லாலின் அதிமனோகரம் வெளியீட்டுத் தேதி!
அதிமனோகரம் வெளியீட்டுத் தேதி....

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் அதிமனோகரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 366 ஆவது திரைப்படம் உருவாகி வருகிறது. அதி மனோகரம் எனப் பெயரிட்டுள்ள இத்திரைப்படத்தில் மோகன் லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்க, மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்துள்ளார்.
ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் முதல் பாடலான சுந்தர ராவணன் பாடல் வெளியாகி கவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில், அதிமனோகரம் திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வருகிற டிச. 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.