இன்று மாலை.... சிலம்பரசன் ரசிகர்களுக்கு நற்செய்தி!
அரசன் திரைப்பட அப்டேட்...
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் அரசன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் அரசன் திரைப்படத்தின் புதிய புரோமோ தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால், அண்மையில் புரோமோவுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்தாலும் இசையமைப்பாளர் அனிருத் தன் திருமண பரபரப்பில் இருப்பதால் அவரால் அரசனுக்கு இசையமைக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும் இதனால் டிசம்பர் முதல் வாரத்தில்தான் அரசன் புரோமோ வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகின.
Advertisement
Advertisement
இதனால், எஸ்டிஆர் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தனர். இந்த நிலையில், அரசன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ். தாணு, “தீபாவளிக்கான சரவெடி இன்று மாலை 6.20 மணிக்கு..” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இது, அரசனுக்கான அப்டேட் என்பதால் புரோமோ அல்லது சிறப்பு விடியோ ஏதேனும் வெளியாகலாம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.