ஜெயிலர் - 2 ஓடிடி தேதி அறிவிப்பு!
ஜெயிலர் - 2 ஓடிடி தேதி...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய ஜெயிலர் - 2 திரையரங்க வெளியீட்டிலேயே ரூ. 820 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படங்களில் இதுவே மிகப்பெரிய வணிகத்தைச் செய்த படமாகவும் மாறியுள்ளது. இயக்குநர் நெல்சனுக்கும் தொடர் வெற்றியாக அமைந்துள்ளதால் ஜெயிலர் - 2 அனைத்து வகையிலும் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான படைப்பாக மாறியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் அமேசான் ஓடிடியில் நவ. 12 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க வெளியீட்டிலிருந்து 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவாக வெளியாகவுள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.