ஓடிடியில் ஜெயிலர் - 2 எப்போது?
ஜெயிலர் - 2 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
இயக்குநர் நெல்சன் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
கடந்த அக். 15 ஆம் தேதி உலக அளவில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 820 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழ் சினிமாவின் நம். 1 வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.
ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே, இரண்டாம் பாகத்துக்கும் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
மேலும் இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவ. 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.