FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியாவில் மட்டும் ரூ. 500 கோடி வசூலித்த ஜெயிலர் - 2!

ஜெயிலர் - 2 வசூல் குறித்து...

நடிகர் ரஜினிகாந்த்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தியாவிலேயே மிகப்பெரிய வசூலைச் செய்துள்ளது.

ஜெயிலர் - 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 775 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழில் மட்டும் இப்படம் ரூ. 310 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.

மேலும், தெலுங்கில் ரூ. 82 கோடி, கேரளத்தில் ரூ. 75 கோடி, ஹிந்தியில் ரூ. 47 கோடி, கன்னடத்தில் ரூ. 7 கோடி என வசூலித்துள்ளதகாவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவிலேயே இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 திரைப்படம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

நவ. 5 ஆம் தேதி வரை இப்படத்திற்கான திரை எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்பதால் இன்னும் கூடுதல் வசூலைச் செய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.0, ஜெயிலர், கூலி, ஜெயிலர் - 2 என 4 ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூல் திரைப்படத்தை ரஜினி கொடுத்துள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Actor Rajinikanth's film Jailer 2 has achieved the highest box office collection in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments