தமிழ் சினிமாவில் முதல்முறையாக... சாதனை படைத்த ஜெயிலர் - 2!
வசூலில் ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2....
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படம் வசூல் சாதனையைச் செய்து வருகிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. டைகர் முத்துவேல் பாண்டியனான நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பாகத்தில் சிலை கடத்தல் மாஃபியாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை ஆக்சன் காட்சிகளுடன் எடுத்திருந்தனர். முதல் பாகத்தை ஒப்பிட இரண்டாம் பாகம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வந்ததால் பல பகுதிகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் 4 நாளில் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால், குறுகிய நாள்களிலேயே இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
வசூலில் பல சாதனைகளைச் செய்த நடிகர் ரஜினிகாந்த் 75 வயதிலும் இந்திய அளவில் பல நடிகர்களையும் ஆச்சரியப்படுத்தவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Actor Rajinikanth's Jailer 2 is creating a box office record.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.