FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்று வரை டிக்கெட் விற்பனை அமோகம்... ஜெயிலர் - 2 வசூல் எவ்வளவு?

ஜெயிலர் - 2 டிக்கெட்கள் விற்பனை குறித்து...

ஜெயிலர் 2 படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / அஹிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ்
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் டிக்கெட் விற்பனைகள் அமோகமாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய ஜெயிலர் - 2 திரைப்படம் நாளை (நவ. 12) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது பல திரைகளிலும் நல்ல டிக்கெட்கள் விற்பனையைக் கண்டு வருகிறது.

Advertisement

Advertisement

இதனால், இப்படம் உலக அளவில் திரையரங்க வெளியீட்டிலேயே ரூ. 835 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படங்களில் இதுவே மிகப்பெரிய வணிகத்தைச் செய்த படமாகவும் மாறியுள்ளது. இயக்குநர் நெல்சனுக்கும் தொடர் வெற்றியாக அமைந்துள்ளதால் ஜெயிலர் - 2 அனைத்து வகையிலும் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான படைப்பாக மாறியுள்ளது.

அடுத்ததாக, நடிகர் ரஜினியின் தர்மன் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Ticket sales for actor Rajinikanth's film 'Jailer 2' are going exceptionally well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.