நடிகர் விஷாலின் மகுடம் ஓடிடி தேதி!
மகுடம் ஓடிடி தேதி அறிவிப்பு...
நடிகர் விஷால் நடிப்பில் உருவான மகுடம் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தை முதலில் இயக்குநர் ரவி அரசு இயக்கினார். ஆனால், சில நாள்களிலேயே நடிகர் விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரவி அரசு அப்படத்திலிருந்து விலக, விஷாலே இயக்குநர் பணியையும் மேற்கொண்டார்.
நாயகிகளாக துஷாரா விஜயன், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்ததால், மகுடம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.
Advertisement
Advertisement
ஆனால், கடந்த ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மோசமான விமர்சனங்களையும், குறைந்த வசூலையும் பெற்றது. மேலும், இப்படத்திற்காக விஷால் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்த நிலையில், இப்படம் நாளை (செப். 11) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The OTT release date for the movie Magudam, starring actor Vishal, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.