நடிகர் விஜயகுமாரின் அறிவு டீசர் தேதி!
அறிவு டீசர் தேதி அறிவிப்பு...
நடிகர் விஜயகுமார் நடிப்பில் உருவான அறிவு திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உறியடி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜயகுமார். தொடர்ந்து, உறியடி - 2 மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.
அதன்பின், சில ஆண்டுகள் கழித்து ஃபைட் கிளப் என்கிற திரைப்படத்தின் மூலம் ஆக்சன் நாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது, இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் அறிவு என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Advertisement
Advertisement
மலைகிராமங்களில் கல்வியைக் கொண்டு சேர்க்கும் வாத்தியாராக இப்படத்தில் விஜயகுமார் நடித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நாளை (அக். 15) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The teaser release date for the film Arivu, starring actor Vijayakumar, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.