ஜான் டோ - அர்ஜுன் தாஸின் புதிய திரைப்படம்!
நடிகர் அர்ஜுன் தாஸின் புதிய திரைப்பட அறிவிப்பு குறித்து...
நடிகர் அர்ஜுன் தாஸின் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து, கான் சிட்டி மற்றும் லவ் இணையத் தொடர் அண்மையில் வெளியானது. ஆனால், சொல்லிக்கொள்ளும் வெற்றியைப் பெற முடியாமல் இருக்கிறார்.
அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்த குட் பேட் அக்லி, ஓஜி ஆகிய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றாலும் நாயகனாக திருப்புமுனை திரைப்படம் எதுவும் அமையவில்லை.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் ஜான் டோ என்கிற புதிய திரைப்படத்தில் நாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சஞ்சனா நட்ராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாகுபலி திரைப்படத்தைத் தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
இயக்குநர் மதுமிதா வல்லமை தாராயோ, கே.டி. ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Arjun Das' new film has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.