ராணுவ வீரர் எழுதிய தேசப்பற்று மிகுந்த கதை... இயக்கி நடிக்கும் அர்ஜுன்!
நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பான் இந்திய திரைப்படம் குறித்து...

பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் சார்பாக அனூப் மேனன் தயாரிப்பில் நடிகர் அர்ஜுன் பான் இந்திய படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் பூஜையும் படத்தின் தலைப்பு அறிவிப்பும் வரும் நவ.27ஆம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் நடைபெற இருக்கிறது.
பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பின் மூன்றாவது படமாக இந்தப் படம் உருவாகிறது. பாலிவுட் மற்றும் பல மொழிகளில் இருக்கும் நாயகர்கள் இதில் நடிக்கிறார்கள்.
Advertisement
Advertisement
மேஜர் விஜய் ராகவன் இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் தியாகம், வீரம், தேசப்பற்று மிகுந்த கருத்துகள் அடங்கிய கதையாக உருவாகியுள்ளது. மிகப்பெரிய பொருள்செலவில் உணர்ச்சி மிகுந்த கதையாக உருவாகியுள்ளது.
அயோத்தியாவில் இந்தப் படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அங்கு பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக அர்ஜுன் நடிப்பில் பிளாஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பொலிமேரா 3 படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.