சிம்புதேவன் இயக்கத்தில் உருவான நவோரியா! எப்போது வெளியீடு?
இயக்குநர் சிம்புதேவனின் புதிய திரைப்படம் குறித்து...
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சிம்புதேவனை தமிழின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் சேர்த்தது.
Advertisement
Advertisement
ஆனால், அதன்பின் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய புலி, கசட தபற, போட் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், சிம்புதேவனுக்கான வணிகமும் குறைந்தது.
இந்த நிலையில், நடிகர் விமலை வைத்து சிம்புதேவன் நவோரியா என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இது டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது. இப்படமும் அவரின் முந்தைய திரைப்படங்களைப் போல் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.