வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு தள விடியோ!
பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு தள விடியோ இன்று வெளியானது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு தள விடியோ இன்று வெளியானது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன், தினேஷ், ஷோபிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் வேட்டுவம்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ என்கிற அறிமுக விடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
கேங்ஸ்டர் பாணி அறிவியல் புனைவாக புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் 2027 பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு தள விடியோ ஒன்றை தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.