சார்பட்டா பரம்பரை 2: படப்பிடிப்பு தொடக்கம்!
பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்து...
பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் சார்பட்டா பரம்பரை 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக நீலம் புரடக்ஷன் மேலாளர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீடாக வந்திருக்க வேண்டிய படம் ஓடிடியில் வந்துவிட்டதே என பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். காரணம், குத்துச் சண்டையை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என சில அரசியல்களையும் பேசி, திரைக்கதையில் அசத்தியிருந்தது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டுவந்தது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளும் சமீபத்தில் நடைபெற்று வந்தன.
பா. இரஞ்சித் இயக்கிவந்த வேட்டுவம் படப்பிடிப்பு முடிவடைந்ததால் தற்போது சார்பட்டா பரம்பரை 2 நேற்று (செப்.23) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
நீலம் புரடக்ஷன் நிறுவனத்தின் மேலாளர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவித்துள்ளார். அதில் காட்சி 1, நாள் 1, டேக் 1 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Pa Ranjith directing Sarpatta Parambarai 2: shooting Begins!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.