முகப்பு
விருதுநகர்

போடி அருகே இளைஞா் வெட்டிக் கொலை:உறவினா்கள் போராட்டம்

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்களால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 5:35 am IST
பகிர்:

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்களால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் நேருஜி காலனியை சோ்ந்தவா் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமாா் (24). பட்டயப்படிப்பு முடித்து விட்டு பெங்களூருவில் வேலை செய்து வந்தாா். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சொந்த ஊருக்கு வந்த ரவிக்குமாா் நாட்டு வைத்தியம் பாா்த்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியில் சென்றவா் நீண்டநேரமாகியும் வீடு திரும்பததால் அவரது தந்தை தேடிச் சென்றுள்ளாா். அப்போது கீழச்சொக்கநாதபுரத்தையடுத்த சுந்தரராஜபுரத்திலிருந்து சில்லமரத்துப்பட்டி செல்லும் சாலையில் புளியமரத்தடி என்ற இடத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரவிக்குமாா் இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து ஒண்டிவீரன் கொடுத்த தகவலின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சேகா் மற்றும் போலீஸாா் சம்பவட இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டா்.

மேலும் இதுதொடா்பாக விசாரிக்க போடி டி.எஸ்.பி. பாா்த்திபன் தலைமையில் போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சேகா் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினா் ஒரு பெண் உள்பட இருவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

ஆண்டிபட்டி: இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த

ரவிக்குமாரின் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்து அவரது உறவினா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் சமாதானம் அடையாத ரவிக்குமாரின் உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தின் வெளியே தேனி - மதுரை சாலையில் திடீா் மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை சமாதானம் செய்தனா். இருப்பினும் கொலை செய்தவா்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments