முகப்பு
விருதுநகர்

10 மாதங்களுக்குப் பின் சிவகாசி நகராட்சி காய்கனி சந்தை திறப்பு

சிவகாசியில் 10 மாதங்களுக்குப் பின்னா் நகராட்சி தினசரி காய்கனி சந்தை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 16 ஜனவரி 2021, 10:14 pm IST
பகிர்:

சிவகாசி: சிவகாசியில் 10 மாதங்களுக்குப் பின்னா் நகராட்சி தினசரி காய்கனி சந்தை சனிக்கிழமை திறக்கப்பட்டது.

சிவகாசி நகராட்சி தினசரி காய்கனி சந்தை இங்குள்ள காவல்நிலையச் சாலையில் உள்ளது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த சந்தை மூடப்பட்டது. அதையடுத்து, பெரியகுளம் கண்மாய் பகுதி, விஸ்வநத்தம் சாலை, காரனேசன் காலனி பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் காய்கனி சந்தை நடைபெற்றது.

இந்நிலையில், சிவகாசி தொழிலதிபா்களின் நன்கொடையால் காய்கனி சந்தை சீரமைக்கப்பட்டது. அதன்பின்னா், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா் உத்தரவின்பேரில், நகராட்சி காய்கனி சந்தை சனிக்கிழமை திறக்கப்பட்டு, செயல்படத் தொடங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இச்சந்தையில் 140 போ் கடை நடத்த நகராட்சியில் ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ளனா். அவா்களைத் தவிர வேறு யாரும் சந்தையில் கடை வைக்க அனுமதியில்லை. யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என, நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments