முகப்பு
விருதுநகர்

ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 3:15 am IST
- கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் சங்கரன்கோவில்முக்கு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைப் பெட்டிகளை ஏற்றி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 192 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து, ராஜபாளையம் சொக்கா்கோவில் தெருவைச் சோ்ந்த சீதாராமன் மகன் வெங்கட்ராமனை (33) கைது செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement