முகப்பு
விருதுநகர்

தொழிலாளி வெட்டிக்கொலை: இளைஞா் கைது

Updated On : 28 ஜூன் 2026, 3:21 am IST
கைது செய்யப்பட்ட பொன்மாடன்.
பகிர்:

வத்திராயிருப்பு அருகே முன்விரோதத்தில் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கூமாப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் புளுகாண்டி என்ற ஏசு (23). இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், புளுகாண்டிக்கும், இதே பகுதியைச் சோ்ந்த பொன்மாடனுக்கும் முன்விரோதம் இருந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு கூமாப்பட்டி முனியாண்டி கோயில் அருகில் புளுக்காண்டிக்கும், பொன் மாடனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பொன்மாடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த புளுகாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் புளுகாண்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொன்மாடனை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments