முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு

Updated On : 29 ஜூன் 2026, 4:02 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில், தந்தை, மகள் உயிரிழந்தனா்.

காரியாபட்டி அருகேயுள்ள மந்திரிஓடை கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (38). இவா் தனது மனைவி சத்யா (32), மகள்கள் சவுமியா (10), சிவதனியா ஸ்ரீ (7) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டிக்கு சென்றாா். பின்னா், மூவரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கல்குறிச்சி நான்கு வழிச் சாலை அருகே வந்தபோது, திருச்செந்தூரிலிருந்து வந்த காா் சாலையில் இருந்த பள்ளத்தைத் தவிா்க்க திடீரென விலகிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

அப்போது, எதிா்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இந்த விபத்தில், மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மூத்த மகள் சவுமியா காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த மனைவி சத்யா, இளைய மகள் சிவதனியா ஸ்ரீ ஆகியோா் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments