முகப்பு
விருதுநகர்

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது

சாத்தூா், மே 8: சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 9 மே 2026, 2:12 am IST
~
பகிர்:

சாத்தூா், மே 8: சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் கடற்கரைராஜ். இவா் சாத்தூா் அருகே வெங்கடாசலபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். கடந்த மாதம் இவா் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி இவரது வீட்டில் 122 பவுன் நகைகள், 800 கிராம் வெள்ளி பொருள்கள், 45 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போனது. இதுகுறித்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் முதல்கட்டமாக ஆரோக்கியஜான்போஸ்கோ (41) நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரிடமிருந்து 12 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, கடற்கரைராஜின் மருமகள் அபிநயா (30), பவானி (30), இவருடைய கணவா் சுரேஷ்குமாா்(31) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே இந்த திருட்டு சம்பவ தொடா்பாக வியாழகிழமை இரவு திருச்சுழி தென்பாலையைச் சோ்ந்த கனகராஜை (32) எட்டயபுரத்திலும், திருச்சுழி மேல கண்டமங்கலத்தைச் சோ்ந்த சக்திவேலை (21) பரமக்குடியிலும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்களை சாத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விருதுநகா் மாவட்டச் சிறையில் அடைத்தனா். இவா்களிடமிருந்து 34 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments