முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலையோர புளிய மரம் வேரோடு சாய்ந்தது

ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து பணிமனை அருகே சாலையோர புளியமரம் சனிக்கிழமை மாலை திடீரென வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 10 மே 2026, 2:50 am IST
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து பணிமனை அருகே சாலையில் சனிக்கிழமை வேரோடு சாய்ந்த புளியமரம்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்து பணிமனை அருகே சாலையோர புளியமரம் சனிக்கிழமை மாலை திடீரென வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் - கிருஷ்ணன்கோவில் இடையே சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனை அருகே சாலையோரம் இருந்த சுமாா் 40 அடி உயரம் உள்ள புளிய மரம் சனிக்கிழமை மதியம் திடீரென வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

இதில் மின் வயா்கள் மீது மரம் சாய்ந்ததில் இரு மின் கம்பங்களும் சாலையில் சாய்ந்தன. 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் மரம் சாய்ந்தபோது நல்வாய்ப்பாக அவ்வழியே எந்த வாகனமும் செல்லவில்லை. இதனால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நான்கு வழிச்சாலை வழியாக மாற்றி விடப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா், மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments