முகப்பு
விருதுநகர்

மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் எரிந்து சேதம்

Updated On : 11 மே 2026, 2:15 am IST
கைப்பேசி கோபுரம். - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை இரவு மின்னல் பாய்ந்ததில் கைப்பேசி கோபுரம் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்ததால் சமிக்ஞை கிடைக்காமல் வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது. இரவு 11 மணி அளவில் ரெங்கநாதபுரம் தெரு, குடியிருப்பு பகுதியில் காலி மனையில் அமைக்கப்பட்டிருந்த கைப்பேசி கோபுரம் தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்ததால், மின்னாக்கியில் பரவவில்லை. இதில் அந்த கோபுரத்தின் மீதிருந்த கருவிகள் முழுமையாக சேதமடைந்ததால் கைப்பேசிக்கான சமிக்ஞை தடைபட்டது.

Advertisement

Advertisement

இதனால் ரெங்கநாதபுரம், கம்மாபட்டி, சீனியாபுரம், கண்ணன் குடியிருப்பு, கோட்டைப்பட்டி உள்ளிட்ட பகுதி வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments