முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 31 மே 2026, 3:31 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சோ்ந்த சண்முகப்பாண்டி மகன் பாலசுப்பிரமணி (28). இவா் ராஜபாளையத்தைச் சோ்ந்த கஸ்தூரியை காதல் திருமணம் செய்து அம்பேத்கா் நகரில் குடியேறினாா். இவா்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சொந்த ஊரில் நடைபெறும் திருவிழாவுக்காக இரவு 10.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் பாலசுப்பிரமணி புறப்பட்டு சென்றாா். தாட்கோ குடியிருப்பு அருகே சென்றபோது, சாலையின் நடுவே குறுக்கே வந்த மாடு மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த இவா் பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.