முகப்பு
தினமணி கதிர்

வராததால் வந்தவர்..!

மறைந்த நடிகை சாவித்திரிக்கு சிறு வயதில் நாட்டியத்தில் ஆர்வம் அதிகம். நாட்டியம் பயின்று நன்றாக ஆடி பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

Updated On : 25 டிசம்பர் 2022, 6:00 am IST
பகிர்:

மறைந்த நடிகை சாவித்திரிக்கு சிறு வயதில் நாட்டியத்தில் ஆர்வம் அதிகம். நாட்டியம் பயின்று நன்றாக ஆடி பரிசுகளும் பெற்றிருக்கிறார்.

ஆந்திரத்தில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சியில் லலிதா, பத்மினி நாட்டியம் நடைபெறுவதாக இருந்தது.  ஏதோ காரணத்தால், அவர்கள் வர முடியாமல் போனது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் பரபரத்தபோது, சாவித்திரியின் நாட்டியத் திறமையை நன்கறிந்த ஒருவர் இதுகுறித்து தெரிவித்தார்.  உடனே சாவித்திரியை நாட்டியம் ஆட வைத்தனர். மிக சிறப்பாக நடனமாடிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார் சாவித்திரி.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் சாவித்திரியின் நடனத்தாலும் துருதுருப்பாலும் ஈர்க்கப்பட்டார். உடனே அவர், தெலுங்குப் படம் ஒன்றில் சாவித்திரிக்கு ஒரு சிறு வேடத்தில் வாய்ப்பு அளித்தார்.

இதுதான் சாவித்திரியின் திரைப்பிரவேசம்.

நடனமாட வேண்டியவர்கள் வராததால், சாவித்திரிக்கு வந்தது திரைப்பட வாய்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments