கருமை மறைந்து: உதடுகள் சிவப்பழகு பெற...?
உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது.
- உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக் கூடாது. எச்சிலில் இருக்கும் பாக்டீரியா உதட்டில் புண்களை ஏற்படுத்தும். மற்றும் உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் மறைந்து வெடிப்பு உருவாகும்.
- உதடு பாதிப்பு அடைய மற்றுமொரு காரணம் மேக்கப். எனவே உறங்கச் செல்லுவதற்கு முன்பு உதடுகளில் சுத்தம் செய்வது அவசியம்.
- எலுமிச்சை பழத்தை நறுக்கி அதனைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன.
- ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும்.
- மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.
- புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும்.
- கொத்துமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.
- நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.
- பீட்ரூட்சாறு உதடுகளில் உள்ள கருமையை விரைவில் மறைத்து விடும்.
- ஜாதிக்காயை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.